ராமநாதபுரம்

தேர்தல் முன்விரோதம் பெண் மீது தாக்குதல் ராணுவ வீரர் கைது

DIN

முதுகுளத்தூர் அருகே கடம்பன்குளத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக ராணுவ வீரரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கடம்பன்குளம் கிராமத்தைச்சேர்ந்த உடையான் மகன் முருகவேல்(40).இவர் ராணுவத்தில் பணிபுரிந்து விடுப்பில் வந்துள்ளார். இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி குடும்பத்தினருக்கும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று முருகவேல் தனது வீட்டிற்கு கிராமத்திற்கு வரும் தண்ணீரை குழாய் மூலம் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். புகழேந்தியின் மனைவி வீரலெட்சுமி(40) தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீரலெட்சுமியை முருகவேல் கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த வீரலெட்சுமி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக புகழேந்தி முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரின் ராணுவ வீரர் முருகவேலை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT