ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் ஆட்சியர் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

DIN

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி, வட்டாட்சியர் கோபால், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராதாகிருஷ்ணன், சாவித்ரி, காவல் ஆய்வாளர் சரவணன், அரசு மருத்துவர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, முதுகுளத்தூர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பேரூராட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பி.கே. ரவி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி, காவல் ஆய்வாளர் சரவணன், சார்பு-ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, நிலவேம்பு குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT