ராமநாதபுரம்

பரமக்குடியில் ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

பரமக்குடியில் வியாழக்கிழமை கீழத்தூவல் ஐவர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறத்தமிழர் சேனை சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் கே.ஏ.பாண்டித்துரை, மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச்செயலாளர் சி.எம்.டி.ராஜா, முத்துக்குமார் பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் நவநீதன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மு.மதுரைவீரன் ஆகியோர், ஐவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைக்கக் கோரியும், வறுமையில் வாடும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிடக் கோரியும், பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப் படுத்திடக் கோரியும், ஆற்றில் கொட்டப்படும் கட்டட கழிவுகள் மற்றும் கழிவு நீர் குப்பைக் கழிவுகளை உடனே தடுத்திடக் கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT