குளியலறையில் வழுக்கி விழுந்த மாணவர் சாவு
ராமநாதபுரத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு பகுதியில் வடக்குப்புதுத் தெருவில் வசித்து வரும் சேகர் மகன் நிதிஷ்குமார்(19). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ.முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது தாயார் மலர்விழி புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.