நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்
பம்பரம் விளையாடும் சிஎஸ்கே வீரர்களின் வைரல் விடியோ குறித்து...
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் பம்பரம் விளையாடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன், “நான் ஒரு பம்பரம் சாம்பியன்” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 5 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சிஎஸ்கே இருக்கிறது. ஆனால், கடந்த 3 சீசன்களாக பிளே ஆஃப்ஸுக்கு முன்னேறாமல் தடுமாறி வருகிறது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் மூன்றில் வென்று புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமிருக்கும் 6 போட்டிகளில் ஐந்திலாவது வென்றால் மட்டுமே பிளே ஆஃப்ஸுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருக்கிறது.
Advertisement
Advertisement
சிஎஸ்கே அணி நாளை (மே.2) மும்பையுடன் சென்னையில் மோதுகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே வீரர்கள் பம்பரம் விளையாடும் விடியோ வெளியாகியுள்ளது.
சிஸ்கே நிர்வாகத்தில் வீரர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்படும். தோல்விகள் அந்த அணியைப் பாதிக்காது என்பதற்கு சான்றாக இந்த மாதிரியான போட்டிகள் வைத்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறது.
இந்த விடியோவில் பல வீரர்கள் முதலில் பம்பரம் எப்படி விடுவது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். பின்னர், சரியாக கயிற்றினைச் சுற்றி லாவகமாக விடுகிறார்கள். இதில் சஞ்சு சாம்சன், “ நான் எல்லாம் இதில் கைத் தேர்ந்தவர்; எங்களூரில் நான் பம்பரம் சாம்பியன்” என்கிறார்.
தொடக்க முதலே சொதப்பி வந்த ஆயுஷ் மாத்ரே இறுதியில் நன்றாக பம்பரம் விடுவார். தன்னுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
“I’m a Bambaram champion!” – Sanju Samson and csk players local challenge video goes viral
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.