FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சூர்யவன்ஷிக்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இடம்பெறச் செய்வதற்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.

Updated On : 10 ஜூலை 2026, 6:06 pm IST
சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ
பகிர்:

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இடம்பெறச் செய்வதற்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன், அடுத்த மூன்று போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். ஆனால், அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மூன்று போட்டிகளில் அவர் 14, 13 மற்றும் 15 ரன்கள் முறையே எடுத்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இடம்பெறச் செய்வதற்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் எப்போதும் அணியிலிருந்து நீக்கப்படுகிறார்? சஞ்சு சாம்சனின் கடந்த 11-12 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தில், அவர் தொடர்ச்சியாக நன்றாக விளையாடவில்லை என்ற விஷயம் அவரை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. உணர்வுப்பூர்வமாக பார்த்தால் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் எடுத்து வந்தது சரியான விஷயம். ஆனால், லாஜிக் படி யோசித்தால் சஞ்சு சாம்சனை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள்? உணர்வுப்பூர்வமாகவோ அல்லது லாஜிக் அடிப்படையிலோ எப்போதும் முடிவுகளை எடுக்க முடியாது.

எப்போதெல்லாம் அணியிலிருந்து ஒருவர் நீக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் இருந்தால் நன்றாக விளையாடியிருப்பார் எனப் பேசுவோம். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இல்லை. அனைவரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் அணியில் இல்லை எனக் கேட்டார்கள். இப்போது அவர் அணியில் இருக்கிறார். ஆனால், ரஜத் படிதார் ஏன் இன்னும் அணிக்குள் வரவில்லை எனக் கேட்கிறோம் என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A former Indian player has spoken about whether it was right to drop Sanju Samson to accommodate Vaibhav Suryavanshi in the team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments