ராமநாதபுரம்

திருவாடானை அருகே இளைஞர்களின் சொந்த செலவில் ஊருணி மராமத்து

DIN

திருவாடானை அருகே கருப்பூர் கிராமகத்தில்  இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமான ஊருணியை சுத்தம் செய்து கிணறு அமைத்தனர்.
திருவாடானை தாலுகா ஆதியூர் பஞ்சாயத்து கருப்பூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் பருவ மழை பொய்த்து விட்டதால் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும்எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். 
இதனால் இப்பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமத்தில் இருந்த தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க களமிறங்கினர். இதையடுத்து கிராம மக்களின் துணையோடு கிராமத்தில் உள்ள கலப்பா ஊருணியில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி அதில் ஒரு கிணறும் தோண்டினர். 
தற்போது கிணற்றில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதனை இப்பகுதி மக்கள் பயண் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கிணறை பாதுகாக்கும் வகையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

பள்ளி மாணவா்களுக்கு மே 1 முதல் கோடை கால பயிற்சி முகாம்

தேநீா்க் கடையை சேதப்படுத்திய இருவா் கைது

SCROLL FOR NEXT