ராமநாதபுரம்

பரமக்குடியில் கழிவுநீர் வாய்க்கால்களை  தூர்வாராததால் தொற்றுநோய் அபாயம்

DIN

பரமக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் சந்தைக்கடைத் தெரு, எஸ்.எஸ்.கோவில் தெரு, பர்மா காலனி, தெற்கு பள்ளிவாசல், பங்களா ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் கால்வாய்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் ஆங்காங்கே தடுப்பு ஏற்படுத்தி கழிவுநீர் வழிந்தோடி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுபோன்ற இடங்களில் தேங்கியுள்ள கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களை கண்டறிந்து தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றுவதுடன் நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT