கமுதி ஒன்றியத்தில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கமுதியில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை பார இயக்கத் திட்ட மத்திய குழு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கமுதியில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை பார இயக்கத் திட்ட மத்திய குழு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இங்குள்ள சடையனேந்தல், டி.வி.எஸ்.புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பறை மற்றும் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகள், கிராமப் புற மக்கள் குடிநீர் வசதியை முழுமையாக பயன்படுத்துவது குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த ஆய்வில் சுகாதார திட்டம் மற்றும் ஊரக குடிநீர் திட்டம் சார்பாக ஜி.என்.ஜா மற்றும் எம்.ஜி.குப்தா உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது கமுதி வட்டார வளர்சி அலுவலர்கள் தங்கப்பாண்டியன், ரவி (ஊராட்சிகள்), ஒன்றிய மேற்பார்வையாளர்கள் சாதிக்பாட்ஷா, சதீஷ்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, மாவட்ட ஒருங்கினைப்பாளர் நவநீதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.