முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதியில் உள்ள ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்கள் தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதியில் உள்ள ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்கள் தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
 கமுதியில் எந்தவொரு முன்னறிப்புமின்றி ஏர்செல் நிறுவன இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கமுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அரசு சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏர்செல் நிறுவனத்தின் "போஸ்ட்பெய்டு' இணைப்புகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் தற்போது செயலிழந்து விட்டன. அதே போல் கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். 
எனவே தமிழக அரசு தலையிட்டு, ஏர்செல் வாடிக்கையளர்கள் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வரை ஏர்செல் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தேதி வரை இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →