ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் கரும்பு விலை அதிகம்

DIN

திருவாடானை பகுதியில் கரும்பு விலை அதிகரித்து விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானை பகுதியில் நெல் விவசாயமே பிரதானம் என்பதால் இப்பகுதி விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முக்கியமாக கொண்டாடுகின்றனர். எனவே பொங்கலுக்கு வேண்டிய கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவை வெளி மாவட்டங்களில் இருந்து தான் இப்பகுதிகளுக்கு வரும். இந்நிலையில் கரும்பு விலை அதிகமாக விற்கப்படுவதால் விவசாயிகளும், இப்பகுதி பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சுவாமிநாதன் கூறியதாவது: இப்பகுதிக்கு பக்கத்து மாவட்டமான சிவகங்கையில் இருந்து தான் கரும்பு வர வேண்டும்.
அங்கு மழை சரியாக பெய்யாததால் கரும்பு விளைச்சல் குறைந்து அதன் விலையும் கூடுதலாக விற்கப்படுகிறது. 10 கரும்புகள் கொண்ட கட்டு கடந்த ஆண்டு ரூ.100லிருந்து ரூ.200 வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு கரும்பு கட்டு ரூ.500-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் போதுமான அளவு கரும்பு வாங்க முடியாமல் கவலை அடைந்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT