ராமநாதபுரம்

இந்திய கடலோர காவல் படையின் மண்டபம் அலுவலகத்தில் மருத்துவ முகாம்

DIN

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்தில் கடலோர மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த முகாமை ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஸ்டீபன்ராஜ் தொடங்கி வைத்தார். இந்திய கடலோர காவல் படை கமாண்டர் (பொறுப்பு) ஆங்கூர், மருத்துவர்கள் திவ்யபாரதி, ஜோசப்ராஜன், அன்பரசன்,நிஜமுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். 
இதில் பொதுமருத்துவம், பல் கிசிச்சை, பெண்கள்,குழந்தைகள் மற்றும் சித்தா முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரையில் நடைபெற்றது. இதில் 500-க்கு மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிசிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT