ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

DIN

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இம்முகாமுக்கு, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவர் எஸ். சகுந்தலா தலைமை வகித்தார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூகப் பணியாளர் எஸ். மகேஸ்வரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பி. மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சைல்டு-லைன் 1098 மூலம், குழந்தைகள் திருமண தடை சட்டம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, குழந்தைகள் நல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT