முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் மருத்துவர்கள் தின விழா: பார்வையாளர்களை கவர்ந்த பெண் மருத்துவர்களின் பரதநாட்டியம்

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் அரவிந்த அரங்கத்தில் மருத்துவர்கள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் அரவிந்த அரங்கத்தில் மருத்துவர்கள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இடம்பெற்ற பெண் மருத்துவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
 விழாவுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் தி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். ஷிபான் நூர் குளோபல் அகாதெமி மெட்ரிக். பள்ளி தாளாளரும், மருத்துவருமான இ.மன்சூர், தமிழ்ச்சங்கத் தலைவர்  மை.அப்துல்சலாம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ரா.பரணிக்குமார் வரவேற்றார். இதில், மகப்பேறு மருத்துவர் கனகப்பிரியா பால்ராஜ், ஹோமியோபதி மருத்துவர் வித்யாபிரியதர்ஷினி பரணிக்குமார், குழந்தைகள் வினசியா விஸ்வநாதன், ஜனனி பரணிக்குமார் ஆகியோர் "பசுமை இந்தியா' என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து "அருள்மருந்து' என்ற தலைப்பில் கலைவாணி குழுவினர், மாணவர்கள் ப.வசந்தன், ஜெ.மதுவிகா, ப.பிரவீனா, ரஷ்சஸ்ரீ ஆகியோர் பாடல்கள் பாடினர். பின்னர் நரம்பு நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் எஸ்.சகுபர்சாதிக் "இன்பம் எங்கே, இன்பம் எங்கே' என்ற தலைப்பில் பேசினார்.
 "சொல்ல மறந்த கலை' என்ற தலைப்பில் கண் மருத்துவரும், சங்க செயலாளருமான பொன்.சந்திரசேகரனும், "இலக்கியமும், மருத்துவமும்' என்ற தலைப்பில் பல் மருத்துவர் மு.ஷாஜகானும் பேசினர். 
முடிவில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மருத்துவம் தொடர்பான தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.
 அதைத்தொடர்ந்து, ஷிபால் நூர் குளோபல் அகாதெமி பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.