முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட  இரட்டைமடி வலையால் மீன்பிடிப்பு அதிகரிப்பு

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாக மீனவ சங்கப் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாக மீனவ சங்கப் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.
ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஆயிரம் மீனவர்கள், சார்பு தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடல் வளம் அழிவதுடன் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் இரட்டை மடி வலைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளம் அழிவதுடன் இறால் மீன்பிடிப்பும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. எனவே இவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இறால் மீன் பிடிப்பில் ஈடுபடும்  விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்போரை தடுக்காவிட்டால் ஒட்டுமொத்த மீன்பிடித் தொழிலும் இந்த பகுதியில் அழிந்து விடும் என மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →