முகப்பு
தமிழ்நாடு

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்!

தவெக சார்பில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றது குறித்து....

Updated On : 18 மார்ச் 2026, 6:49 pm IST
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் - யூடியூப்
பகிர்:

சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு துறந்தனர். பிறகு நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்துகொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 1000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.