ராமநாதபுரம்

மதுபானக்கூட ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்: காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மதுக்கூட ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து  சென்னை மனித உரிமை ஆணையத்தில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த தனியார் மதுபானக் கூடத்தின் ஊழியர் சி.முனியசாமி என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:
கமுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைக்கப்பட்ட தனியார் மதுக் கூடத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தேன்.  கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆர்.திலகவதி இரண்டு காவலர்களுடன் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி மதுபானக் கூடத்துக்கு
வந்தார். அப்போது, தான் பணியில் சேர்ந்து ஒரு மாதமாகியும்,  மதுக்கூடத்தின் உரிமையாளர் தன்னை வந்து பார்க்கவில்லை என்று கூறியதுடன், மதுக்கூடத்தின் உரிமத்தைக் காண்பிக்குமாறு என்னிடம் கூறினார். அதுகுறித்து எனக்குத் தெரியாது என்று நான் கூறவே, என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினார். இதைத் தொடர்ந்து, மதுக் கூடத்தின் உரிமையாளர் முருகேசன் வந்தவுடன் என்னை உதவி ஆய்வாளர் திலகவதி விடுவித்தார். அவர், தாக்கியதில் எனக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஆகவே, காவல் உதவி ஆய்வாளர் திலகவதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: இந்த மனு குறித்து சென்னை மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அதில், காவல் உதவி ஆய்வாளர் திலகவதி விதிகளை மீறியதுடன், முனியசாமியைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது. ஆகவே, முனியசாமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். அந்தத் தொகையை உதவி ஆய்வாளர் திலகவதியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி  டி.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT