முகப்பு
ராமநாதபுரம்

தந்தைக்கு 2-ஆவது திருமணம்: மகன் தீக்குளித்து தற்கொலை

பரமக்குடி அருகே தந்தை 2-ஆவது திருமணம் செய்துகொண்டதால் மகன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 15 மே, 2018 at 12:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பரமக்குடி அருகே தந்தை 2-ஆவது திருமணம் செய்துகொண்டதால் மகன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பரமக்குடி ஒன்றியம் லெட்சுமணம் குடியிருப்பைச் சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவருக்கு திருமணமாகி மனைவியும் 8-ஆம் வகுப்பு படிக்கும் லோகேஸ்வரன் (13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலேஸ்வரன் வேறு ஒரு பெண்ணை 2 -ஆவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவிக்கும் கமலேஸ்வரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது லோகேஸ்வரன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய், தந்தை பிரச்னையால் அவர் மனமுடைந்து தீக்குளித்தது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் ஆய்வாளர் அமுதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.