முதுகுளத்தூர் அருகே சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதி பால் வியாபாரி சாவு
முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில்பால் வியாபாரி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில்பால் வியாபாரி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே வைத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த குமரையா மகன் ரமேஷ்குமார் (35). பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் மு.கடம்பன்குளம் கிராமத்தில் பால் கறக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதிய ரமேஷ்குமார் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முதுகுளத்தூர் காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.