ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரம்

DIN


திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள சனவேலி, பாரனூர், ஏ.ஆர்.மங்கலம், கொன்னக்குடி, கீழ்பனையூர், மேல்பனையூர், கற்காத்தகுடி, தும்பாடகோட்டை, சோழந்தூர், வண்டல், வரவணி, செங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதிகளில் தற்போது சம்பா பட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போய்விட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே இந்த ஆண்டுக்குரிய விவசாய காலம் தொடங்கியதையடுத்து, இப்பகுதிகளில் பெய்த குறைந்த அளவு மழையை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு செய்து முடித்து விட்டனர். விதைப்பு செய்யப்பட்ட நிலங்களில் நெல் பயிர் முளைத்து வளரத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டாவது பருவ மழை பெய்து
விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் களைக்கொல்லி தெளிப்பது உள்ளிட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT