ராமநாதபுரம்

கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

DIN

கமுதி அருகே தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால், கழிவுநீருடன் மழை நீர் கலந்து தேங்கி நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
      கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 12-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்நிலையில், கிராமத் தெருக்களில் மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும்  கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லை. 
    இதனால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் தேங்கி துர்நாற்றும் வீசுவதுடன், நோய் பரவுவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
   எனவே, தெருக்களில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வாய்க்கால் வசதி ஏற்படுத்தித் தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT