ராமநாதபுரம்

சேதுபதி மன்னர்களின்  கோட்டைகள் புகைப்படக் கண்காட்சி 

DIN

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளின் புகைப்பட கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு திறந்து வைத்தார். 
இதில் செங்கமடை, ஆறுமுகக்கோட்டை, கமுதி, ராமநாதபுரம் கோட்டை, திருமயம், திருப்புல்லாணி ஆகிய  ஊர்களில் உள்ள சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகளின் புகைப்படங்கள், வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. 
கோட்டைகள் பற்றிய தகவல்களை பார்வையாளர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துக் கூறினர்.  மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT