ராமநாதபுரம்

பிள்ளையார்குளத்தில் கந்தூரி விழா

DIN

சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இவ் விழா கடந்த அக். 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை நேர்த்தி கடனாக கிடாக்கள், சேவல்கள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்காசு அம்மா தர்காவின் மக்பராவில் புனித சந்தனம் பூசி, பிறை வடிவ பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது.இதையொட்டி பொது அன்னதானம் வழங்கப்பட்டது. சாயல்குடி, கடலாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்களும் பிற மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர் .
இது குறித்து விழாக் கமிட்டியினர் கூறுகையில், ஆண்டுதோறும் புரட்டாசி வளர்பிறையில் அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி இவ்விழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடிவருகிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT