ரஜினி மக்கள் மன்றக் கூட்டம்
திருவாடானை அருகே நம்புதாளையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாடானை அருகே நம்புதாளையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் செந்தில் செல்வா ஆனந்த் தலைமை வகித்தார். துணைச் செயலர் அருள்சகாயபிரபு, மாவட்டச் செயலர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தொண்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதில், தொழில்நுட்பச் செயலர் ராமச்சந்திரன், வர்த்தக அணி பொறுப்பாளர் பாண்டிதுரை, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ரவி மற்றும் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திருவாடனை ஒன்றியப் பொறுப்பாளர் காளிதாஸ் வரவேற்றார். மன்ற துணைப் பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.