ராமநாதபுரம்

ஆர். எஸ். மங்கலம் புயல் பாதுகாப்பு இல்லத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN


ஆர் எஸ் மங்கலம் அருகே பாரமரிப்பு இன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் புயல் பாதுகாப்பு இல்லத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல், வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க ஆர்எஸ் மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ் பி பட்டிணம் ஆகிய பகுதிகளில் புயல் பாதுகாப்பு இல்லங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில் ஆர் எஸ் மங்கலம் அருகேயுள்ள புயல் பாதுகாப்பு இல்லம் கவனிப்பாரின்றி உள்ளது.
இந்த கட்டடத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன.
மேலும் இந்த கட்டடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புயல் பாதுகாப்பு மையத்தை சீரமைத்து தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT