ராமநாதபுரம்

கமுதி அருகே கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் நீர்வரத்து பாதிப்பு

DIN

கமுதி அருகே கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பால் உருக்குலைந்த தடுப்பணையால் தண்ணீரின்றி விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கமுதி பெரிய கண்மாயிலிருந்து 800 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், சேதுராஜபுரம் கண்மாயில் 22 ஆண்டுகளுக்குமுன் தடுப்பணை அமைக்கபட்டது. கமுதி கண்மாய்க்கு குண்டாறு மூலம் நேரடியாக தண்ணீர் பாசன வசதி உள்ளது. 
குண்டாற்றில் 9 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் தடுப்பணை, நீர்வரத்து கால்வாய்கள் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சிறுமழை பெய்தாலே புறம்போக்கு, தரிசு நிலங்கள், ரோட்டோரங்களிலிருந்து வரும் மழைநீரை கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணிதுறை அதிகாரிகள் மழைக்காலத்திற்கு முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்ற கால்வாய்கள், தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT