ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே குடிநீர்வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

DIN

முதுகுளத்தூர் அருகே குடிநீர் வசதி கோரி ஊராட்சி ஆணையாளரிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்துள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளக்கனேந்தல், கண்ணத்தான் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் தண்ணீர் இல்லையென  ஊராட்சி எழுத்தரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இக்கிராமங்களில் 3 ஆண்டிற்கு முன் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து விட்டன. இதனால் கிராமத்தில் பயன்படுத்த உப்பு தண்ணீர் கூட இல்லை. இது தொடர்பாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் விளக்கனேந்தல், கண்ணத்தான் ஆகிய இரண்டு ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் வசதியின்றி சிரமப்படுவதால் புதிய குழாய்கள் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டுமென முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இல்லாவிடில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT