ராமநாதபுரம்

குண்டாற்றில் மணல் திருட்டு

DIN

கமுதி குண்டாற்றில் அனுமதியின்றி அள்ளப்பட்ட 250 மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 
    கமுதி குண்டாற்றில் இரவு பகலாக சாக்கு பைகளில் மணல் திருடுவது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கமுதி வருவாய் ஆய்வாளர் (கிழக்கு) முருகானந்தம் தலைமையில், வருவாய்த் துறையினர் கமுதி குண்டாறு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது, பட்டப்பகலில் 10-க்கும் மேற்பட்டோர் சாக்கு பைகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். வருவாய்த் துறையினர் வருவதைக் கண்ட அவர்கள், அங்கிருந்த தப்பியோடிவிட்டனர். 
     அதையடுத்து, அங்கிருந்த 250 மணல் மூட்டைகளை கைப்பற்றி,  வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT