ராமநாதபுரம்

பாலித்தீன் பைகளை தவிர்க்க மீனவர்களிடையே கடற்படையினர் துண்டுப்பிரசுரம்

DIN

ராமேசுவரத்தில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாலித்தீன் பொருள்களை தவிர்க்க வேண்டும் என, இந்தியக் கடற்படையினர் மீனவர்களிடையே வியாழக்கிழமை துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
     ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இந்தியக் கடற்படையினர் பாலித்தீன் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கடலில் வீசும் பாலித்தீன் பைகளால்  மீன்கள் பாதிப்படைவது குறித்தும், சேராங்கோட்டை மீனவக் கிராமத்தில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கினர்.  நிகழ்ச்சியில், கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் அனில்குமார்தாஸ் தலைமையிலான கடற்படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
   இதில், கடற்படை அதிகாரி  எல்.கே. சிங் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT