ராமநாதபுரம்

மதுரை-ராமேசுவரம் இரட்டை  ரயில் பாதை  அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளர் உறுதி

DIN

மதுரை-ராமேசுவரம் இடையே இரட்டை வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அதிமுக வேட்பாளர் என்.சதர்ன்பிரபாகர் கூறினார். 
பரமக்குடி நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பரமக்குடியில் உள்ள சிகை திருத்தும் மருத்துவர் சங்கம், பரமக்குடி-எமனேசுவரம் செளராஷ்டிர சபை நிர்வாகிகள், ஆயிர வைசிய சபை மற்றும் சங்க உறுப்பினர்கள், வெள்ளாளர் சபை மற்றும் அனைத்து வெள்ளாளர் சபை நிர்வாகிகள் உள்பட பல்வேறு சமுகத்தைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து அவர் வாக்குச் சேகரித்தார். 
 மாலையில் செளராஷ்டிர முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் வி.ஜி.ராமதாஸ் தலைமையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.பி. ராம்பாபு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி.ஆர்.ராம்பிரபு ஆகியோர் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் என்.சதர்ன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். பெரியகடை வீதி, சின்னக்கடை தெரு, காந்திஜி தெரு, எமனேசுவரம் நேருஜி மைதானம், ஓட்டப்பாலம் உள்பட  நகரின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT