ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடல் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு கூட்டம்

DIN

ராமேசுவரத்தில் கடல் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ) மாவட்டக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். மாநில தலைவர் பு.செலஸ்டின், மாநில பொதுச் செயலாளர் அந்தோணி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், ராமேசுவரம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை உடனடியாக அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடல் கரையில் 3 கடல் மைல் தொலைவு பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் மூன்று தீவுப்பகுதியில் போடப்பட்டுள்ள கடல் மிதவையை வனத் துறையினர் உடனே அகற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட சிஐடியூ சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.அய்யாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  மாவட்டச் செயலாளர் ஆ.கருணாமூர்த்தி  
வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT