ராமநாதபுரம்

கொத்தனாருக்கு கத்திக்குத்து பெயிண்டர் கைது

DIN

ராமநாதபுரம் நகரில் கொத்தனாரை முன்விரோதத்தில் கத்தியால் குத்திய பெயிண்டரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர் கண்ணன் கோவில் பின்புறம் உள்ள புளிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகன் ராஜா (38).  கொத்தனார். இவருக்கும் ராமநாதபுரம் பசும்பொன்நகரைச் சேர்ந்த பெயிண்டர் சரவணன் (45) என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறைத் தொடர்ந்து ராஜா வெளியூர் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ராமநாதபுரம் வந்துள்ளார். இந்தநிலையில் திங்கள்கிழமை காலை ஆசாரி தெரு பூங்கா அருகே அவர் நின்றுகொண்டிருந்தபோது அங்கே வந்த சரவணன் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் ராஜாவைக் குத்தினாராம். 
இதில் முதுகுப்பகுதி, வயிறு, கை உள்ளிட்டவற்றில் பலத்த காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதுகுறித்து ராஜாவின் தாய் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து சரவணனைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT