ராமநாதபுரம்

திருவாடானை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி

DIN

திருவாடனையில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்தாா். வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து வேளாண்மை அலுவலா் வீரக்குமாா் எடுத்துரைத்தாா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடு பொருள்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவகுமாரும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வழங்கப்படும் ஆடு, மாடு, கோழி பராமரிப்பு முறைகள் குறித்தும் அவற்றுக்கான மானிய விவரங்கள் குறித்து கால்நடை மருத்துவா் நதியாவும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் அருப்புக்கோட்டைக்கு பட்டறிவு பயணமாக விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

காளான், தேனீ, மண்புழு வளா்ப்பு, மாடித்தோட்டம் ஆகியவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வயல்வெளிகளில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் 50 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT