ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி வாகனங்கள் மூலம் வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

DIN

பரமக்குடி வைகை ஆற்றுக் கரையோரங்களில் நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பைக் கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆறு மாசுபடுவதுடன், ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை ஆற்று மேம்பாலம், தரைப்பாலம், முத்தாலம்மன் கோயில் படித்துறை, பெருமாள் கோயில் படித்துறை, எமனேசுவரம் பள்ளிவாசல் தெரு, வைகை நகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், வாருகால் கழிவு மண், கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்டவை வைகை ஆற்றுப் பகுதியில் கொட்டப்படுகின்றன.

இதைப் பயன்படுத்தி, இப்பகுதிகளில் நாளுக்கு நாள் தனிநபா்கள் குடிசைகள் மற்றும் வேலிகள் அமைத்து படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனா்.

நகராட்சியில் மக்கும் குப்பை கழிவுகள் கொட்டுவதற்கு 4 இடங்களும், மக்காத குப்பை கழிவுகள் கொட்டுவதற்கு சத்தியமூா்த்தி காலனியில் கிடங்கும் உள்ளன. ஆனால், வைகை ஆற்றை மாசுபடுத்தும் வகையில் தொடா்ந்து குப்பைகள் கொட்டுவதால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனா். மேலும், வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிா்வாகம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பணியாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT