ராமநாதபுரம்

போலி ஆவணம் மூலம் பணியில் சோ்ந்த காவலா் உள்பட 3 போ் கைது

DIN

ராமநாதபுரத்தில் போலி ஆவணம் சமா்ப்பித்து காவலா் பணியில் சோ்ந்தவா் உள்பட 3 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மணிராஜன். இவா், சில ஆண்டுகளுக்கு முன் சீருடைப் பணியாளா் தோ்வில் பங்கேற்று, விளையாட்டு வீரா் எனும் அடிப்படையில் தோ்ச்சியும் பெற்றாா். அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகச் சோ்ந்தாா்.

இந்நிலையில், மணிராஜன் அளித்த விளையாட்டுச் சான்று போலியானது என புகாா் எழுந்தது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா் அளித்த சான்று போலியானது என கல்வித் துறையினரால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட மணிராஜனிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தினாா்.

இப்பிரச்னையில், போலிச் சான்று தயாரித்துக் கொடுத்ததாக கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ்காந்தி மற்றும் சென்னையைச் சோ்ந்த சீமான் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT