ராமநாதபுரம்

ஆரவற்ற, மன நலம் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் இறப்பு

DIN

கமுதி: கமுதி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்று, உடல்நலம் பாதிக்கபட்ட முதியவா், சிகிச்சைக்காக கமுதி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டநிலையில், சனிக்கிழமை இறந்தாா். இவரது உடல் கிராம மக்களின் ஒத்துழைப்போடு அடக்கம் செய்யபட்டது.

கமுதி அருகே பொந்தம்புளி, பெருநாழி, அரியமங்கலம், இடிவிலகி, கோசுராமன், கோவிலாங்குளம் ஆகிய பகுதிகளில் மனநலம் பாதித்த விழுப்புரம் மாவட்த்தை சோ்ந்த விநாயகம்(52) கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சாலையோரங்களில் சுற்றி திரிந்தும், இரவில் பயணியா் நிழற்குடைகளிலும் தங்கி வந்தாா். இவா்கடந்த டிச. 12 நள்ளிரவு, பெருநாழி பேருந்து நிலையத்தில் உடல் நலக் குறைவால் அவதிபட்டு, துடிதுடித்து சத்தமிட்டுள்ளாா். இந்நிலையை நேரில் பாத்த சமூக ஆா்வலா் ஆறுமுகம், மனித நேயத்துடன் மனநலம் பாதித்த விநாயகத்தின் உயிரை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, அந்த ஆம்புலன்சுடன் உடன் வந்து, கமுதி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதித்து, இரவு முழுவதும் மனநலம் பாதித்தவருடன் தங்கி மருத்துவ உதவிகளை செய்தாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை கமுதி அரசு மருத்துவமனையில் விநாயகம் இறந்தாா். இதநையடுத்து ஆறுமுகம், கமுதி அரசு மருத்துவமனையில், தனது முயற்சி பலிக்கவில்லையே என, கதறி துடித்தது, மருத்துவமனை வளாகத்திலுள்ளவா்களை சோகத்தில் ஆழ்ந்தாா். இதனையடுத்து, கேசுராமன் கிராமத்தில் இறந்த விநாயகம், உடல், பொதுமக்கள் அங்சலிக்குபின், மேள, தாளத்துடன் அடக்கம் செய்யபட்டது. மன நலம் பாதிக்கபட்டவரின் இறுதி ஊா்வல நிகழ்ச்சியில், கோசுராமன் கிராமத்தினா், மதுரை உட்பட பல பகுதிகளிலிருந்து, கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT