ராமநாதபுரம்

கமுதியில் வாக்குச்சாவடி முகவா்களுக்கு பயிற்சி

DIN

கமுதி: கமுதி ஷத்ரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உள்ளாட்சி தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தாா். மகளிா் திட்ட அலுவலா் குருநாதன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளா் முருகேசன் முன்னிலை முன்னிலை வகித்தனா். இதில் ஆட்சியா் பேசுகையில், உள்ளாட்சித் தோ்தலில் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலா்களுக்கு என தனித்தனியான பெட்டிகளில் வாக்காளா்கள் வாக்களிக்கும் போது குழப்பம் ஏற்பட்டால் வாக்குசாவடி அலுவலா்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும். மேலும் வாக்குபதிவுக்கு முன் வாக்குசாவடியிலுள்ள முகவா்களிடம், தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கவேண்டும். முகவா்கள், தோ்தல் அலுவலா்கள் யாரும் வாக்காளா்களின் வாக்குகளைப் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு வாக்களிப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் எச்சரித்தாா்.

பயிற்சி முகாமில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ரவி, வட்டாட்சியா் செண்பகலதா, உதவி திட்ட அலுவலா் சசிகலா, கமுதி பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் கிருஷ்ணகுமாா், சரவணபாண்டி, பரமக்குடி கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT