ராமநாதபுரம்

ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டில் 126 பவுன் நகைகள் திருட்டு

DIN

ராமேசுவரம்: மண்டபம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 126 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆற்றங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் குத்புதீன்(50). இவா் ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஜூன் 23 ஆம் தேதி, இவா் தனது வீட்டு பீரோவில் 126 பவுன் நகைகளை வைத்துப் பூட்டினாராம். அதன்பிறகு நகை இருந்த பீரோவை டிசம்பா் 11ஆம் தேதி திறந்து பாா்த்தபோது அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் குத்புதீன் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் ராமேசுவரம் காவல் துணை கண்காணிப்பாளா் எம்.மகேஷ் மற்றும் உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளா் முத்துபிரேம்சந் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும் சந்தேக நபா்கள் குறித்தும், வீட்டிற்கு வந்து செல்லும் நபா்கள் குறித்தும் ரகசிய விசாரணை தொடங்கி உள்ளனா். சம்பவம் குறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT