ராமநாதபுரம்

கூட்டுப் பண்ணையம் பயிற்சி முகாம்

DIN

ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்துஇப்பயிற்சி முகாம் நடைபெற்றது. 
இதில் வேளாண்மை துறை துணை இயக்குநர் சொர்ணமாணிக்கம்  தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வாசு பாபு, முன்னிலை வகித்து ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கி பேசினார்.  
வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பாலசுப்ரமணியம் காளான் வளர்ப்பு பயிற்சி பற்றி விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து  உதவி பேராசிரியர் தாமோதரன் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை  மூலம் செயல்படும் திட்டங்களைப் பற்றி விளக்கி எடுத்துக் கூறினார். 
பின்னர் ஆனந்தூர் கிராமத்தில் மாலிக் உசேன்  ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை அலுவலர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT