ராமநாதபுரம்

திருப்புல்லாணி கோயிலில்  திருக்குருங்குடி ஜீயர் தரிசனம்

DIN

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்குருங்குடி ஜீயர் தரிசனம் செய்தார்.
 ரத சப்தமியை முன்னிட்டு இக்கோயிலுக்கு வந்த ஜீயரை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ராமு, கோயில் பேஷ்கர் கண்ணன் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு 
ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாசனித்தாயார், ஆண்டாள், தர்ப்பசயனராமர், பட்டாபிஷேக ராமர் ஆகிய சன்னதிகளில் அவர் தரிசனம் செய்து மங்களா சாசனம் செய்தார்.
பின்னர் ஆண்டவன் ஆசிரம தேசிகன் சன்னதியில் ஜீயர் மங்களா சாசனம் செய்தார்.
அப்போது கோயிலில் இருந்து சுவாமி தேவிபிராட்டியருடன் ஜீயர் மடத்தில் எழுந்தருளிய திருமஞ்சனம் நடைபெற்றது.இந்தநிகழ்ச்சியில் ஜே.எஸ்.வாசன் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் பல்லக்கில் சுவாமி, பிராட்டியருடன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT