ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு மார்ச் 6 வரை காவல் நீட்டிப்பு

DIN

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு நான்காவது முறையாக காவலை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைப் படகுடன் இலங்கை  கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதையடுத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நான்காவது முறையாக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை 8 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஜூட்சன் விசாரணை மேற்கொண்ட போது மீனவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 8 மீனவர்களும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT