முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பியால் ஆபத்து

முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால்

Updated On : 23 ஜனவரி 2019, 8:05 am IST
பகிர்:

முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கருமல், குமாரக்குறிச்சி கிராமங்களுக்கு இடையில் பிரதான சாலையில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பிகள் சேதமடைந்து பல மாதங்களாக தரையில் கிடந்தது.  தற்போது கிராம மக்கள் கருவேல மரக்குச்சியை ஊன்றி மின்கம்பியை தூக்கி வைத்துள்ளனர். இருப்பினும் கால்நடை மேய்ச்சலுக்கு அவ்வழியே செல்லும்போது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.