ராமநாதபுரம்

ஆடிப்பூர விழா:  ஆதிரெத்தினேஸ்வரர் அன்ன வாகனத்தில் வீதி உலா

திருவாடானையில் ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்

DIN

திருவாடானையில் ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்ன வாகனத்தல் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 25 ஆம் தேதி  விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 ஞாயிற்றுக்கிழமை இரவு நான்காம் நாள் திருவிழாவில் சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். 
விழா ஏற்பாட்டினை சமஸ்தான தேவஸ்தான நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் புவனேஸ்குமார் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT