ராமநாதபுரம்

தமிழக அரசு மீது முகநூலில் அவதூறு: வாழ்வுரிமை கட்சி நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

DIN

தமிழக அரசு மீது முகநூலில் அவதூறு பரப்பியதாக,  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலர் மீது வழக்குப் பதியப்பட்டதை அடுத்து, அவர் வியாழக்கிழமை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜரானார்.  
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மகன் ஆறுமுகம் என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், ஓரிக்கோட்டை பாரதி நகரைச் சேர்ந்த  முருகானந்தம் என்பவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலராக உள்ளார். இவர், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டுள்ளார் என்றும், அவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 
அதன்பேரில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து, முருகானந்தத்தை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் முன்ஜாமீன் பெற்று, அதன்படி திருவாடானை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி ஜாமீனில் வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT