ராமநாதபுரம்

தேவகோட்டையில் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

தேவகோட்டையில்  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   சார்பில் ஆர்ப்பாட்டம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 

DIN


தேவகோட்டையில்  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   சார்பில் ஆர்ப்பாட்டம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கும்  முடிவை கைவிட வேண்டும். 
கோரிக்கைகளுக்காகப்  போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். 
2019-20 ஆம்கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற வகையில் நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
ஆர்ப்பாட்டத்திற்கு  மாநில செயற்குழு உறுப்பினர்  புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். வட்டாரப் பொருளாளர் ஜோசப்பாஸ்கரன் நன்றி கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT