ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ.34 கோடியில் காவலர் குடியிருப்பு கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையின் 12 ஆவது பட்டாலியன் காவலர்களுக்கு குடியிருப்புக்கான கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையில் 12 ஆவது பட்டாலியன் காவலர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக, சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட 79 ஏக்கர் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு முதன்மைப் பொறியாளர் தென்னரசு, தெற்கு மண்டலக் கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மதுரை மண்டலச் செயற் பொறியாளர் ஜெயக்குமார், உதவிச் செயற்பொறியாளர் சங்கர், உதவிப் பொறியாளர் ஞானவேல் மற்றும் 12 ஆவது பட்டாலியன் கமான்டெண்ட் சிதம்பரம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
சுமார் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 3 பிளாக் காவலர் குடியிருப்பு, அலுவலகம் மற்றும் ஆயுதங்கள் வைக்கும் அறைகளுடன் கட்டப்பட உள்ளதாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT