ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 72 லட்சம்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் காணிக்கையாக ரூ. 72.27 லட்சம், 130 கிராம் தங்கம்  மற்றும் 2  கிலோ 275 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 72 லட்சத்து 27 ஆயிரத்து 843 ரூபாய் ரொக்கம், 130 கிராம் தங்கம்  மற்றும் 2  கிலோ 275 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் இருக்கன்குடி கோயில் இணை ஆணையர் கருணாகரன், உதவி ஆணையர் குமரேசன், ஆய்வர் சுந்தரேஷ்வரி, தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், மேலாளர் முருகேசன், கமலநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT