ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்

DIN

ராமேசுவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பண்பு பயிற்சி முகாம் நிறைவு அணிவகுப்பு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் பள்ளியில்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கான பண்பு பயிற்சி வகுப்பு கடந்த மாதம் தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா வியாழக்கிழமை ராமேசுவரத்தில் நடைபெற்றது. 
இதையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு விவேகானந்த பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பின்னர் பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழா ஸ்ரீதரணி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. 
ராமகிருஷ்ணமடம் செயலாளர் ஸ்ரீநியமானந்தா சுவாமிகள் ஆசியுரையாற்றினார். 
கிராமத் தலைவர்கள் ஸ்ரீ முனீஸ்வரன், முத்துக்குமார், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் மாநில இணை செய்தி தொடர்பாளர் ஸ்ரீ இரா.சூரியநாராயணன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT