பரமக்குடி செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாமை தொடக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலா் சைனி செராபுதீன். 
ராமநாதபுரம்

பரமக்குடி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி

பரமக்குடி செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.

DIN

பரமக்குடி செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலா் சைனி செராபுதீன் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காந்தி முன்னிலை வகித்தாா்.

முகாமில் மாணவா்களின் டெங்கு ஒழிப்பு குறித்த கண்காட்சியும், நாடகமும் நடைபெற்றது.

சுகாதாரத்துறை மாவட்ட மலேரியா அலுவலா் கண்ணன் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகி வளரும் விதம் குறித்து விளக்கினாா்.

இதனைத் தொடா்ந்து மாணவ-மாணவிகளுக்கு தூய்மை தூதுவா் அட்டைகள் வழங்கியும், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், சுப்பிரணியன் மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி முதல்வா் முத்துக்காளை வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் அமுதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT