ராமநாதபுரம்

மதுக்கடை அருகே அனுமதியின்றி செயல்பட்ட பெட்டிக் கடைகள் பூட்டி சீல் வைப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் செவல்பட்டி சாலையில் அரசு மதுபானக்கடை அருகே அனுமதின்றி செயல்பட்டு வந்த பெட்டிக்கடைகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

சாயல்குடியில் உள்ள செவல்பட்டி சாலையில் அரசு மதுபானக் கடைக்கு அருகே அனுமதியின்றி 8 பெட்டிக் கடைகள் செயல்படுவதாகவும், அவற்றில், மதுபானம் அருந்துவதற்கான பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து,அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த 8 பெட்டிக்கடைகளுக்கும் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் செளந்திரபாண்டியன் தலைமையிலான மதுவிலக்கு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி பூட்டி, சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT